ஜெர்மனி அடித்த கோல் மறுக்கப்பட்டது ஏன்? ஃபிஃபா நடுவர் குழு விளக்கம்!
கூடுதல் நேரத்தில் ஜெர்மனி அடித்த கோல் மறுக்கப்பட்டதைப் பற்றி ஃபிஃபாவின் நடுவர் குழுத் தலைவரின் விளக்கம் குறித்து...
கால்பந்து உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் பராகுவே அணிக்கு எதிரான ஜெர்மனியின் ஆட்டத்தில் அந்த அணிக்கு எதிராக விஏஆர் ஒரு கோலை மறுத்தது ஏன் என்று ஃபிஃபாவின் நடுவர் குழுவின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தப் போட்டியில் ரெகுலர் டைமிங்கில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. அதனால், ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. இதில், சரியாக 102ஆவது நிமிஷத்தில் ஜெர்மனி அணியினர் அடிக்கப்பட்ட கோல் விஏஆர் மூலம் மறுக்கப்பட்டது.
இந்த கோல் அடிக்கும்போது ஜெர்மனி வீரர் பராகுவேவின் கோல்கீப்பரைத் தொடுவதால், அவர் கீழே விழுந்து எழுவார். இதனால், அவரால் பந்தைத் தடுக்காமல் முடியாமல் போனதால் விஏஆர் மூலம் சரிபார்க்கப்பட்டது.
Advertisement
Advertisement
போட்டியின் 103-105ஆவது நிமிஷங்கள் வரை விஏஆர் நடுவர் டாட்டியானா குஸ்மான் கள நடுவரை திரையில் பார்க்கும்படி கூறுவார். சில நிமிஷங்களுக்குப் பிறகு அந்த கோல் செல்லுபடியாகாது என தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர், பெனால்டி ஷூட் அவுட்டில் ஜெர்மனி தோல்வியுற்றது.
இது சமூக வலைதளத்தில் சர்ச்சையானது. இது குறித்து ஃபிஃபாவின் நடுவர்கள் குழுவின் தலைவர் பியர்லூய்கி கொலினா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
ஜெர்மனி வீரர் அந்த இடத்தை ஆக்கிரமித்தது தவறு அல்ல; ஆனால், அவர் வேண்டுமென்றே எதிரணியினரை நகர விடாமல், பந்தை அடிக்கும் நோக்கமும் இல்லாமல் இருந்தால் அது குறைவானதாக இருந்தாலும் தவறுதான். வேண்டுமென்றே எதிரணியை தடை செய்தல் என்பதால் நடுவர்கள் குழு, விஏஆர் குழு ஆராய்ந்து இதில் முடிவெடுத்தார்கள்.
இந்த விவாகரத்தில் இது எதிரணியின் கோல்கீப்பரை கோலாக மாறாமல் தடுக்க செய்யப்படும் ஒரு யுக்திதான். பயிற்சியாளர்கள், வீரர்களுக்கு இது குறித்து ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இதில் நடுவர்கள் தண்டனை வழங்கினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த அளவீடுகள் அனைத்தும் பயனுள்ள, ஒருமனதாக எடுக்கப்பட்ட மிகவும் நவீனமான ஒரு முடிவு எனக் கூறியுள்ளார்.
FIFA's referees chief Pierluigi Collina clarifies VAR call disallowing Germany's goal against Paraguay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.