8 போட்டிகளில் 140 முறை கோல் அடிக்க முயன்ற ஸ்பெயின்! மற்ற அணிகள் எவ்வளவு?
ஸ்பெயின் அணி இந்தத் தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 140 முறை கோல் அடிக்க முயன்று சாதனைப் படைத்துள்ளது.
2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
ஸ்பெயின் அணியின் தடுப்பாட்டமும், செயல் திட்டங்களும் இந்தத் தொடரில் வியக்கும் விதத்தில் இருந்ததாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிரணிகளை கோல் அடிக்க விடாமல் திணறச் செய்யும் ஸ்பெயின் அணி இத்தொடர் முழுவதும் காலிறுதியில் ஒரு கோல் மட்டுமே எதிரணியிடன் வாங்கியிருக்கிறது. இறுதிப்போட்டி உள்பட மற்ற எந்தப் போட்டிகளிலும் ஸ்பெயினுக்கு எதிராக மற்ற அணிகள் கோல் அடிக்கவில்லை.
Advertisement
Advertisement
அதேபோல, மற்ற அணிகளைவிட வேறொரு முக்கிய சாதனையையும் ஸ்பெயின் படைத்துள்ளது. 2026 உலகக்கோப்பைத் தொடரில் அதிகமுறை கோல் அடிக்க முயன்ற அணியாக ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது.
மொத்தமாக 140 முறை கோல் கம்பத்தை நோக்கிப் பந்தைச் செலுத்தியுள்ளது ஸ்பெயின் அணி. அதில் 14 கோல்களை அடித்துள்ளது. அடுத்த இடத்தில் பிரான்ஸ் அணி 139 கோல்களுடன் உள்ளது.
அதிகமுறை கோல் அடிக்க முயன்ற அணிகள்:
Spain attempted to score 140 times across 8 matches! How did other teams fare?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.