ஐந்து முறை உலக கால்பந்து சாம்பியன் பிரேசிலை எதிர்கொள்ளும் இந்திய அணி!
ஐந்து முறை உலக கால்பந்து சாம்பியன் பிரேசிலை எதிர்கொள்ளும் இந்திய அணியைப் பற்றி...
கொல்கத்தாவில் நடைபெறும் நட்புறவு கால்பந்து போட்டியில் 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணியை இந்திய கால்பந்து அணி எதிர்கொள்ளவிருக்கிறது.
கால்பந்து போட்டியை ஊக்குவிக்கும் நோக்கில் வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு வந்து நட்புறவுப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. பரபரப்பான ஆட்டங்கள் அடுத்தடுத்து பட்டியலிடப்பட்டுள்ள வேளையில், ஃபிஃபா தரவரிசைப் பட்டியலில் 138-ஆவது இடத்தில் இருக்கும் கற்றுக்குட்டி அணியான இந்தியா, வரிசையாக மூன்று அணிகளை எதிர்கொள்ளவிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
பெங்களூருவில் வருகிற செப். 26 ஆம் தேதி பனாமாவுடனும், அதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் பிரேசில் மற்றும் உருகுவேயுடனும் போட்டிகள் நடைபெறுகின்றன.
Advertisement
Advertisement
2026 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பையிலும் பங்கேற்ற உலகத் தரவரிசையில் 44-வது இடத்திலிருக்கும் பனாமாவுடன் இந்தியா விளையாடுகிறது. இந்தியா - பனாமா அணிகள் வருகிற செப். 26 ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஸ்ரீகாண்டீவரா கால்பந்து திடலில் மோதவிருக்கின்றன.
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் திடலில் அக். 3 ஆம் தேதி நடைபெறும் மிக முக்கியத்துவம் வாய்ந்த 5 முறை சாம்பியனான பிரேசில் அணியுடன் இந்திய அணி விளையாடுகிறது.
இறுதியாக அக். 6-ஆம் தேதி நடைபெறும் உருகுவேயுடனான போட்டியுடன் இந்தத் தொடர் நிறைவடைகிறது. இரண்டு முறை ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற சாம்பியன் உருகுவே அணி, விவேகானந்தா யுவ பாரதி கிரி ரங்கன் திடலில் இந்திய அணியை எதிர்கொள்ளும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
India will face three World Cup-playing nations in a packed international window, with Panama in Bengaluru followed by Brazil and Uruguay in Kolkata. The Uruguay clash on October 6 completes the high-profile schedule.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.