உலக சாம்பியன்கள் பிரேசில், உருகுவே உடன் மோதும் இந்திய கால்பந்து அணி!
இந்தியாவுக்கு விளையாட வரும் உலக சாம்பியன்கள் பிரேசில், உருகுவே கால்பந்து அணிகள் குறித்து...
இந்திய அணியுடன் விளையாட இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற உருகுவே கால்பந்து அணி கொல்கத்தா வருகிறதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கால்பந்து அணி இதுவரை ஃபிஃபா உலகக் கோப்பையில் விளையாட தேர்வாகமேலே இருக்கிறது. அதனால், இந்தப் போட்டி இந்திய அணிக்கு நல்வாய்ப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு முறை (1930, 1950) உலகக் கோப்பை வென்ற உருகுவே அணி கடந்த 2026 உலகக் கோப்பையில் குரூப் சுற்றுடன் வெளியேறியது.
Advertisement
Advertisement
இந்திய கால்பந்து அணியுடன் வரும் அக்.6ஆம் தேதி கொல்கத்தாவில் இருக்கும் விவேகானந்த யூப பாரதி விளையாட்டு திடலில் நடைபெற இருக்கிறது.
இந்திய அணி செப்.26ல் பனாமா உடனும் அக்.3ல் 5 முறை உலகக் கோப்பை வென்ற பிரேசில் உடனும் மோதுகின்றன. அதனுடன் மூன்றாவது மிகப்பெரிய போட்டியும் இந்தியாவுக்கு உறுதியாகியுள்ளன.
ஃபிஃபா தரவரிசையில் உருகுவே அணி 20ஆவது இடத்தில் இருக்கிறது. பனாமா போட்டி பெங்களூரிலும் பிரேசில், உருகுவே போட்டிகள் கொல்கத்தாவிலும் நடைபெற இருக்கின்றன.
பனாமா தரவரிசையில் 44ஆவது இடத்திலும் பிரேசில் அணி 5ஆவது இடத்திலும் இருக்க, இந்திய அணி 138ஆவது இடத்திலும் இருக்கின்றன.
India to welcome two-time world champions Uruguay in Kolkata on October 6
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.