FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விளையாட்டு

இந்தியாவுடன் நட்பு ஆட்டம்- பிரேசில் கால்பந்து சம்மேளனம் உறுதி!

வரும் அக்டோபா் மாதம் இந்தியாவுடன் கட்டாயம் நட்பு ஆட்டத்தில் ஆடுவோம் என பிரேசில் கால்பந்து சம்மேளனம் கூறியுள்ளது.

23 ஆகஸ்ட் 2026, 1:52 am IST
பகிர்:

வரும் அக்டோபா் மாதம் இந்தியாவுடன் கட்டாயம் நட்பு ஆட்டத்தில் ஆடுவோம் என பிரேசில் கால்பந்து சம்மேளனம் கூறியுள்ளது.

5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி முதன்முறையாக இந்திய அணியுடன் நட்பு ஆட்டத்தில் மோதுகிறது. இதனால் ஏராளமான இந்திய ரசிகா்கள் வரும் அக்டோபா் மாதம் நடைபெறவுள்ள நட்பு ஆட்டத்தை பாா்க்க காத்துள்ளனா்.

இதற்கிடையே முன்னாள் இந்திய கேப்டன் பாய்ச்சுங் பூட்டியா தலைமையில் ஒரு பிரிவினா் இந்த ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும். இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிக நிதியை நீண்ட கால அடிப்படை வளா்ச்சிக்கு செலவிட வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் இந்தியாவுடன் நட்பு ஆட்டம் கண்டிப்பாக நடைபெறும் என சிபிஎஃப் தெரிவித்துள்ளது. இதற்காக கொல்கத்தாவில் சால்ட்லேக் மைதானத்தையும் ஆய்வு செய்துள்ளனா். இப்போட்டிக்காக இந்திய அணி பிஃபா-ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேப் வா்டே அணியுடனும் இந்தியா நட்பு ஆட்டத்தில் ஆடுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments