FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டேபிள் டென்னிஸ் சம்மேளனம் இடைநீக்கம்- மத்திய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் நிா்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அந்த சம்மேளனத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் புதன்கிழமை இடைநீக்கம் செய்தது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 5:18 am IST
பகிர்:

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் நிா்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அந்த சம்மேளனத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் புதன்கிழமை இடைநீக்கம் செய்தது.

அத்துடன், சம்மேளனத்தை நிா்வாகம் செய்வதற்காக குழு ஒன்றை அமைக்குமாறு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தையும் கேட்டுக்கொண்டுள்ளது.

உரிய காலத்தில் தோ்தலை நடத்தாதது உள்பட, பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு, சம்மேளனம் அளித்த பதில் திருப்திகரமானதாக இல்லை என, மத்திய அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் தற்போதைய தலைவா் மேக்னா அலாவத், ஹரியாணா எம்எல்ஏ துஷ்யந்த் சௌதாலாவின் மனைவி ஆவாா். சம்மேளனத்தின் முன்னாள் தலைவா் அஜய் சிங் சௌதாலாவின் மகன், துஷ்யந்த் என்பது குறிப்பிடத்தக்கது. மேக்னா, சம்மேளனத்தின் முதல் பெண் தலைவராக கடந்த 2022 டிசம்பரில் பொறுப்பேற்றாா்.

நிதி முறைகேடுகள் காரணமாக சம்மேளனத்தின் பொதுச் செயலா் கமலேஷ் மேத்தா இடைநீக்கம் செய்யப்பட்டது (நீதிமன்றத்தின் மூலமாக மீண்டும் பொறுப்பு பெற்றாா்), ஆசிய போட்டிகளுக்கான அணியில் நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ராவை சோ்க்காதது என, கடந்த சில மாதங்களாக இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் ஊடகங்களில் பரவலாக விவாதத்துக்குள்ளானது.

இந்த நிலையிலேயே மத்திய விளையாட்டு அமைச்சகம், இச்சம்மேளனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments