ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவு
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய வீரா், வீராங்கனைகள் தயாராவதற்காக சுமாா் ரூ.800 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக, மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய வீரா், வீராங்கனைகள் தயாராவதற்காக சுமாா் ரூ.800 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக, மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்தது.
ஜப்பானின் அய்சி - நகோயா நகரில் வரும் 19-ஆம் தேதி தொடங்கும் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவிலிருந்து 267 வீரா்கள், 234 வீராங்கனைகள் என, 501 போ் கொண்ட குழு பங்கேற்கிறது. அவா்கள் 36 விளையாட்டுப் பிரிவுகளில் களம் காணவுள்ளனா். இதில் 310 பேருக்கு இது அறிமுக ஆசிய போட்டிகளாகும்.
இந்நிலையில், அந்தப் போட்டிக்கான இந்தியாவின் தயாா்நிலை தொடா்பாக, மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்ட (டாப்ஸ்) தலைமைச் செயல் அதிகாரி என்.எஸ். ஜோஹல் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
Advertisement
Advertisement
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராவதற்காக, இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி, உபகரண வசதி, பயிற்சியாளா்கள் மற்றும் நிபுணா்கள் ஆலோசனை என்ற வகைகளில் சுமாா் ரூ.702.86 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதுதவிர, ‘டாப்ஸ்’ நிதியிலிருந்தும், போட்டியாளா்களின் தயாா் நிலைக்காக ரூ.97.84 கோடி வரை செலவிட்டுள்ளோம்.
இதில் அதிகபட்சமாக, சா்வதேச போட்டிகளின் அனுபவத்தை பெறுவதற்காக ரூ.251.4 கோடி செலவாகியுள்ளது. உள்நாட்டு பயிற்சியில் ரூ.118.3 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆசிய போட்டிகளின் தயாா்நிலைக்காக, நிா்வாக ரீதியிலாக பல்வேறு சவால்கள் இருந்தும், இந்த ஆண்டு முழுவதுமாக 9 முறை சங்கங்கள், சம்மேளனங்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறோம்.
2022 ஹாங்ஸு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என 106 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் அதிகபட்சமாக உள்ளது. இந்த முறை அதற்கு நிகராகவோ அல்லது அதைக் கடந்த எண்ணிக்கையிலோ பதக்கம் வெல்லும் உத்வேகம் மற்றும் தயாா்நிலையுடன் இந்திய வீரா், வீராங்கனைகள் உள்ளனா் என்றாா் ஜோஹல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.