ஆஸ்திரேலியா செய்த முட்டாள்தனமான யுக்தி: பெனால்டி ஷூட் அவுட்டில் வென்ற எகிப்து!
கால்பந்து உலகக் கோப்பையில் முதல்முறையாக நாக் அவுட் சுற்றில் வென்ற எகிப்து குறித்து...
கால்பந்து உலகக் கோப்பையில் முதல்முறையாக நாக் அவுட் சுற்றில் வென்ற எகிப்து அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியாவுடனான ரவுண்ட் ஆஃப் 32 ஆட்டத்தில் போட்டி சமனில் முடிந்ததால், பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் எகிப்து வென்றது.
அமெரிக்காவின் டல்லாஸ் திடலில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - எகிப்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 13ஆவது நிமிஷத்தில் எகிப்து அணியின் எமாம் அஷோர் கோல் அடித்தார்.
Advertisement
Advertisement
இரண்டாம் பாதியில் 55ஆவது நிமிஷத்தில் முகமது ஹானி ஓன் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன்படுத்தினார். பின்னர் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது.
இதில், ஆஸ்திரேலியா தனது கோல் கீப்பரை மாற்றியது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய மேத்யூ ரையன் என்ற கோல்கீப்பரை மாற்றி, அனுபவம் வாய்ந்த பேட்ரிக் பீச் என்ற கீப்பரை 119ஆவது நிமிஷத்தில் களமிறக்கிய யுக்தி தவறாக அமைந்துவிட்டது.
பேட்ரிக் பீச் ஒரு பெனால்டியைக் கூட தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய கால்பந்து ரசிகர்கள், பயிற்சியாளரின் இந்த யுக்தியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
Egypt wins in World Cup knockout round debut with 4-2 penalty shootout edge over Australia
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.