அமெரிக்காவின் கூட்டாளிகளைக் கவர சீனா முயற்சி? எகிப்து சென்றார் அதிபர் ஜின்பிங்!
சீன அதிபர் ஷி ஜின்பிங் எகிப்து நாட்டுக்குச் சென்றுள்ளது குறித்து...
சீன அதிபர் ஷி ஜின்பிங் அரசு முறைப் பயணமாக எகிப்து நாட்டுக்குச் சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜின்பிங் 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை (செப். 1) மாலை எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவிற்குச் சென்றடைந்தார். கெய்ரோ விமான நிலையத்தில், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி மற்றும் ராணுவ அதிகாரிகள் நேரில் சென்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதிபர் எல்-சிசியை சீன அதிபர் ஜின்பிங் புதன்கிழமை நேரில் சந்தித்து உரையாடுவார் எனவும், இந்தச் சந்திப்பில் இருதரப்புக்கும் இடையேயான முக்கிய உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிசாவில் உள்ள பிரமிடுகளை அதிபர் ஜின்பிங் நேரில் சென்று பார்வையிடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சீனாவின் நீண்டகால எதிராளியான அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்படும் எகிப்துக்கு அதிபர் ஜின்பிங் பயணம் மேற்கொண்டுள்ளது மாபெரும் ஆதிக்க மாற்றமாகக் கருதப்படுகிறது.
வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில், ராணுவ ரீதியாகச் சிக்கிக் கொண்டுள்ள அமெரிக்காவை விடவும் தாங்கள் நிலையான கூட்டாளி எனும் நம்பிக்கையை உருவாக்கும் முயற்சியை சீன அரசு தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இறுதியாக, வளைகுடாவில் உள்ள சௌதி அரேபியா நாட்டுக்குக் கடந்த 2022 ஆம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். மேலும், சுமார் 10 ஆண்டுகளில் முதல்முறையாகத் தற்போது எகிப்துக்குச் சென்றுள்ளார்.
சீனா மற்றும் எகிப்து இடையிலான உறவுகள் 70 ஆம் ஆண்டை எட்டியுள்ள நிலையில், அதிபர் ஜின்பிங் இந்தப் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Chinese President Xi Jinping has arrived in Egypt for a state visit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.