ஜுராசிக் பார்க் புகழ் நடிகர் சாம் நீல் காலமானார்
ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் புகழ் பெற்ற நடிகர் சாம் நீல் காலமானது பற்றி....
ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் புகழ் பெற்ற நடிகர் சாம் நீல் காலமானார்.
நியூசிலாந்தைச் சேர்ந்த நடிகரான இவர் தனது 78வது வயதில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் காலமானார். அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிட்னியில் அவரது மரணம் மிகவும் திடீரென்று மற்றும் எதிர்பாராத விதமாக நிகழ்ந்துள்ளது. சாம் நீல், 2023 ஆம் ஆண்டில் அரிய வகை இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும், தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இறக்கும்போது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு எதுவும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இருந்தபோதிலும் அவரது மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் ஆலன் கிராண்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார். தொடர்ந்து, தி பியானோ, பீக்கி பிளைண்டர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களிலும், வெப் தொடர்களில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. சாம் நீல் மறைவு திரை பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
New Zealand actor Sam Neill, known for "Jurassic Park" and "The Piano", died Monday at 78, his family said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.