ஃபிஃபா உலகக் கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸை வீழத்தி ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸை வீழத்தி ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டம் டல்லாஸ் நகரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் ஒயார்சபால் கோலாக மாற்றினார்.
இதனால் ஸ்பெயின் அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. ஆனால் தொடர்ந்து போராடிய பிரான்ஸ் அணியால் முதல் பாதி ஆட்டத்தில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் பெட்ரோ போரோ கோல் அடித்து ஸ்பெயின் அணியை 2 -0 என்ற கணக்கில் மேலும் முன்னிலைப் பெற வைத்தார்.
Advertisement
Advertisement
இரண்டாவது பாதியிலும் எவ்வளவு முயற்சித்தும் பிரான்ஸ் வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதைத்தொடர்ந்து உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
Spain beat favourites France 2-0 on Tuesday (July 14, 2026) to reach the FIFA World Cup final thanks to a penalty from Mikel Oyarzabal and a goal from Pedro Porro.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.