ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!
ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை டிரம்ப் நேரில் காணப் போவது பற்றி...
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் பார்வையிடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் கடந்த ஜூன் 11ஆம் தேதி தொடங்கிய ஃபிஃபா உலகக் கோப்பைப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பினான ஆர்ஜென்டினாவை ஸ்பெயின் அணி எதிர்கொள்கிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இறுதிப் போட்டியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் காணப் போவதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் அறிவித்துள்ளார்.
முதலில் நியூ யார்க் நகரில் உள்ள டிரம்ப் டவரில் நடைபெறும் ஃபிஃபா வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் டிரம்ப், பின்னர், இறுதிப் போட்டி நடக்கும் நியூ ஜெர்சி மைதானத்துக்குச் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஹாஃப் டைம் இடைவேளையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில் மடோனா, பிடிஎஸ், சஹீரா, பிரபல பாப் பாடகர் ஜஸ்டீன் பைபர், புர்னா பாய், ஆண்ட்ரியா போசெல்லி, ஜே பால்வின், கேட்டி பெர்ரி, லிசா, அனிட்டா, ரேமா உள்ளிட்டோர் பாடவிருக்கிறார்கள்.
சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் நிலையில், உலகளவில் கால்பந்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
US President Donald Trump to attend the FIFA World Cup 2026 final
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.