FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சவூதி அரேபியாவுடன் போராடிய உருகுவே

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், உலகக் கோப்பை போட்டியின் முதல் சாம்பியனான உருகுவே 1-1 என, சவூதி அரேபியாவுடன் போராடி டிரா செய்தது.

Updated On : 17 ஜூன் 2026, 4:54 am IST
பகிர்:

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், உலகக் கோப்பை போட்டியின் முதல் சாம்பியனான உருகுவே 1-1 என, சவூதி அரேபியாவுடன் போராடி டிரா செய்தது. உலகத் தரவரிசையில் உருகுவே 18-ஆம் இடத்திலிருக்க, சவூதி 61-ஆவது இடத்தில் இருக்கிறது.

உருகுவேக்கு கடும் சவால் அளித்த சவூதி அரேபியாவே முதலில் கோல் கணக்கைத் தொடங்கியது. 41-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்காக அப்துலெலா அல் அம்ரி கோல் அடிக்க, முதல் பாதியை சவூதி முன்னிலையுடன் நிறைவு செய்து அசத்தியது.

2-ஆவது பாதியிலும் உருகுவேக்கு எளிதாக கோல் வாய்ப்பை அந்த அணி விட்டுத் தரவில்லை. ஒருவழியாக உருகுவே தரப்பில் 80-ஆவது நிமிஷத்தில் மேக்ஸி அராஜோ கோல் அடித்தார். இதனால் சற்று நிதானமடைந்த உருகுவே தோல்வியைத் தவிர்த்து டிரா செய்தது.

Advertisement

Advertisement

இந்த ஆட்டத்தில் சவூதி அரேபியா தனது 7-ஆவது முயற்சியிலேயே கோல் அடிக்க, உருகுவே 29 முயற்சிகளுக்குப் பிறகே அதை சமன் செய்ய முடிந்தது. சவூதியின் நம்பகமான வீரராக, அதன் கோல் கீப்பர் முகமது அல் ஒவைஸ் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments