எல்லை மீறிய ரொனால்டோ ரசிகர்கள்..! ஜாவோ நெவிஸ், அவரது காதலி மீது சைபர் தாக்குதல்!
போர்ச்சுகல் வீரர் ஜாவோ நெவிஸ், அவரது காதலி மீதான சைபர் தாக்குதல் குறித்து...
போர்ச்சுகல் வீரர் ஜாவோ நெவிஸ், அவரது காதலி மடலேனா அரகாவோ மீதான சைபர் தாக்குதலில் ஈடுபட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்களால் கால்பந்து உலகக் கோப்பையில் சர்ச்சை வெடித்துள்ளது.
போர்ச்சுகல் அணி தனது முதல் போட்டியில் காங்கோ உடன் 1-1 என சமனில் முடித்தது. இந்தப் போட்டியில் தனது கோல் அடிக்கும் வாய்ப்பை ரொனால்டோ பல முறை தவறவிட்டது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்தப் போட்டியில் ஜாவோ நெவிஸ் மட்டுமே கோல் அடித்தார். போட்டிக்குப் பிறகு அவர் பேசியது ரொனால்டோ ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
”ரொனால்டோ கால்பந்து உலகிற்கும் போர்ச்சுகல் அணிக்கும் எவ்வளவு செய்திருக்கிறார் என்பது தெரியும். ஆனால், இந்தத் தருணத்தில் அவரும் நாங்களும் சிறப்பானவர்கள் அல்ல; ரொனால்டோவும் எங்களைப் போல அணிக்கு உதவ இருப்பவரே” என நெவிஸ் கூறினார். இதுதான் ரொனால்டோ ரசிகர்களை சீண்டியுள்ளது.
முன்னதாக, பழைய நேர்காணல் ஒன்றிலும் ரொனால்டோவை விட மெஸ்ஸி, தன்னை முன்னிலைப் படுத்திய நெவிஸின் விடியோக்கள் வைரலாகின. இதனால், கடுப்பான ரொனால்டோ ரசிகர்கள் நெவிஸ் இன்ஸ்டா பக்கத்தில் தாக்குதல் நடத்த தொடங்கினர்.
கமெண்ட்ஸில் நெவிஸிடம் உங்களது காதலரை ரொனால்டோவுக்கு பந்தை பாஸ் செய்யவும் எனக் கமெண்ட் செய்ய, நெவிஸின் காதலி மடலேனா அரகாவோ, “உங்களது சுயநலமான கோட்(GOAT)டை முதலில் ஓய்வு பெறச் சொல்லுங்கள்” எனக் கூறியதாக சமூக வலைதளத்தில் பரவின. இது உண்மையானது, போலியானது எனவும் இருதரப்பிலும் கூறப்படுகிறது.
இருந்தும் இதனால் கோபமடைந்த ரொனால்டோ ரசிகர்கள் மடலேனா அரகாவோவின் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ச்சியாக வசைகளை வாரி இறைத்து வருகிறார்கள்.
எல்லை மீறிய ரொனால்டோ ரசிகர்கள் மடலேனா அரகாவோ உடன் ரொனால்டோ இருக்கும்படி ஏஐ மூலம் எடிட் செய்து சைபர் தாக்குதலை அதிகரித்துள்ளார்கள். ரொனால்டோ இதுவரையான 6ஆவது உலகக் கோப்பையில் 8 கோல்கள் மட்டுமே அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
How dare you touch our Ronaldo? Colleague Joao Neves blunt remarks trigger cyber-attack by die-hard fans... girlfriend's SNS also 'devastated'
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.