முகப்பு
செய்திகள்

சர்ச்சையைக் கிளப்பிய ஜூலியன் அல்வாரெஸ்..! ஜெர்ஸியை எரிக்கும் அத்லெடிகோ ரசிகர்கள்!

சர்ச்சையைக் கிளப்பிய ஆர்ஜென்டீன வீரர் ஜூலியன் அல்வாரெஸின் பேட்டி குறித்து...

Updated On : 23 ஜூன் 2026, 5:32 pm IST
ஜூலியன் அல்வாரெஸ், ஜெர்ஸியை எரிக்கும் அத்லெடிகோ ரசிகர்கள். - படங்கள்: எக்ஸ் / அத்லெடிகோ மாட்ரிட், அல்ட்ராஸ் கிளிப்ஸ் (ultras_clips)
பகிர்:

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூலியன் அல்வாரெஸ் (26 வயது) அத்லெடிகோ மாட்ரிட் கிளப் அணியில் விளையாடி வருகிறார். தற்போது அவர் அந்த அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அத்லெடிகோ மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் இவரை வாங்குவதற்குப் பல அணிகளும் முயற்சித்து வருகின்றன. ”அல்வாரெஸ் விற்பனைக்கு அல்ல” என அத்லெடிகோ கூறி வந்த நிலையில், அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலியன் அல்வாரெஸ் ஒருவருக்காக ரியல் மாட்ரிட் அணி 150 மில்லியன் யூரோஸ் (சுமார் ரூ. 1,675 கோடிகள்) கேட்டும் விற்க முடியாதென அத்லெடிகோ மாட்ரிட் அணி அறிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகின.

Advertisement

Advertisement

மெஸ்ஸி விளையாடிய பார்சிலோனா அணியும் இவரை வாங்க ஆலோசித்து, பின்னர் அதெல்டிகோ மறுத்ததாக செய்திகள் வெளியாகின. அத்லெடிகோ தனது சமூல வலைதளத்தில் நேரடியாகவே மற்ற அணிகளை கிண்டல் செய்து வந்தன.

உலகக் கோப்பை போட்டியில் ஆர்ஜென்டீனா 2-0 என ஆஸ்திரியாவை வென்றது. இந்தப் போட்டிக்குப் பிறகு ஜூலியன் அல்வாரெஸ் பேசியிருப்பதாவது:

அனைவருக்குமே இடம் மாற்றம் என்பது சிறந்தது. ஆனால், அத்லெடிகோ மாட்ரிட் குறித்து பேசுவதற்கு இது சரியான நேரமல்ல. அதேசமயம் நான் இது குறித்து மறைப்பதற்கு எதுவும் இல்லை; நான் உண்மையாக இருக்க விரும்புகிறேன். கிளப்பில் இருக்கும் பேசவேண்டிய நபர்களுடன் நான் பேசியுள்ளேன் என்றார்.

இதனால் கடுப்பான அத்லெடிகோ மாட்ரிட் ரசிகர்கள் அவரது ஜெர்ஸியை எரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

ஸ்பானிஷ் ஊடகங்களில் வெளியான செய்தியின்படி அல்வாரெஸை விடுவிக்க 500 மில்லியன் யூரோஸ் (571 அமெரிக்க டாலர்) நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ. 5,405 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

summary

Argentina forward Julian Alvarez says he wants out of Atletico Madrid

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments