சமபலத்துடன் மோதிய நெதர்லாந்து..! பெனால்டியில் வென்ற மொராக்கோ!
கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் மோதிய நெதர்லாந்து - மொராக்கோ போட்டி குறித்து...
கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் மோதிய நெதர்லாந்து - மொராக்கோ போட்டி மிகவும் விருவிருப்பாகச் சென்றது.
இந்தப் போட்டியில் இரு அணிகளுக்கும் ரெகுலர் டைம் மற்றும் கூடுதல் நேரங்களில் 1-1 என சம நிலையில் இருந்தது. இதனால், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்க்குச் சென்றது
இந்தப் போட்டியில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ 72ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, மொராக்கோ அணியின் இசா டியோப் 90+1ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து சமன்படுத்தினார். பின்னர், 30 நிமிஷ கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதனால், போட்டி பெனால்டிக்கு சென்றது.
Advertisement
Advertisement
இந்த பெனால்டியில் மொராக்கோ 3 - 2 என த்ரில் வெற்றியைப் பெற்றது. மொராக்கோவின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான ஹகிமி பெனால்டியை இழந்ததும் ரசிகர்கள் நம்பிக்கை இழந்தார்கள்.
மொராக்கோவின் இஸ்மாயில் சைபாரி கடைசி வாய்ப்பில் கோல் அடித்து அசத்தினார். இந்தத் தொடரில் அவர் 3 கோல்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Netherlands and Morocco head to extra time tied at 1-1 in World Cup Round of 32
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.