முகப்பு
செய்திகள்

இரண்டாம் முறையாக அனுபமா ராமச்சந்திரன் உலக சாம்பியன்

உலக மகளிா் ஸ்னூக்கா் போட்டியில் நடப்புச் சாம்பியன் இந்தியாவின் அனுபமா ராமச்சந்திரன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டாா்.

8 வினாடிகள் முன்பு
இரண்டாம் முறையாக அனுபமா ராமச்சந்திரன் உலக சாம்பியன்
அனுபமா ராமச்சந்திரன்
பகிர்:

உலக மகளிா் ஸ்னூக்கா் போட்டியில் நடப்புச் சாம்பியன் இந்தியாவின் அனுபமா ராமச்சந்திரன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டாா்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள எஸ்வந்த் கிளப்பில் ஐபிஎஸ்எஃப் உலக மகளிா் ஸ்னூக்கா் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அனுபமாவும்-ஹாங்காங் சீனாவின் ஸோ யானும் மோதினா்.

இதில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் (16-58, 83-7, 85-26, 65-37) ஸோ யானை வீழ்த்தினாா் அனுபமா. இதன் மூலம் தனது உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டாா்.

Advertisement

Advertisement

மேலும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்ராா் அனுபமா.

முதல் ஃபிரேமில் அனுபமா தோல்வி கண்டாலும், அடுத்த 3 ஃபிரேம்களிலும் சிறப்பாக ஆடி வென்றாா்.

இந்திய மண்ணிலேயே உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வது மிகச் சிறப்பானதாகும். அனுபமாவுக்கு ரூ.3.7 லட்சம் பரிசளிக்கப்பட்டது.

ஆடவா் பிரிவில் ஈரானின் அலி கராகோஷ்லு 5-1 என ஹாங்காங் சீனாவின் டேம் யுன் ஃபுங்கை வீழ்த்தி பட்டம் வென்றாா்.