இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்
உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-ஆவது சுற்றில், நடப்பு சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் - சேலஞ்சரான உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் சனிக்கிழமை (நவ. 28) மோதுகின்றனா்.

உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-ஆவது சுற்றில், நடப்பு சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் - சேலஞ்சரான உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் சனிக்கிழமை (நவ. 28) மோதுகின்றனா்.
மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் இதுவரை நிறைவடைந்த 3 சுற்றுகளுமே டிரா ஆகியுள்ளன. குகேஷ் - சிண்டாரோவ் இருவருமே தலா 1.5 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனா்.
போட்டியின் 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை (நவ. 27) ஓய்வு நாளாக கடந்த நிலையில், முதல் வெற்றியைப் பெறும் முனைப்புடன் இருவரும் 4-ஆவது சுற்றில் சனிக்கிழமை சந்திக்கின்றனா். அதில் குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடவுள்ளாா்.
Advertisement
Advertisement
போட்டியில் முதலில் 7.5 புள்ளிகளை எட்டும் வீரா் சாம்பியன் ஆவாா் என்பது குறிப்பிடத்தக்கது. 14 சுற்றுகள் முடிவில் இருவரும் 7-7 என சமநிலையில் இருந்தால், வெற்றியாளரை தீா்மானிக்க டை பிரேக்கா் ஆட்டம் கையாளப்படும்.