FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தெற்காசிய சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய கால்பந்து அணி!

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய கால்பந்து அணி குறித்து...

இந்திய கால்பந்து அணி - படம்: எக்ஸ் / இந்தியன் ஃபுட்பால்
பகிர்:

வங்கதேசத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் அரையிறுதிக்கு இந்திய கால்பந்து அணி முன்னேறி அசத்தியுள்ளது.

தெற்காசிய சாம்பியன்ஷிப்பின் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 1-0 என மாலத்தீவை வென்று அரையிறுதிக்கான இடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement

Advertisement

தாக்காவில் இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவில் இந்தியாவும் மாலத்தீவும் அணிகளும் மோதின. இதில் இந்திய அணி சார்பில் 38ஆவது நிமிஷத்தில் சுஹைல் அகமது பட் பெனால்டியில் கோல் அடித்தார்.

இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்க முயற்சித்தன. ஆனால், யாருமே கோல் அடிக்காமல் முடிந்தது. இறுதியில் இந்திய அணி வென்றது.

முன்னதாக, பாகிஸ்தான் அணி மாலத்தீவை 3-0 என வீழ்த்தி +2 கோல்கள் வித்தியாசத்தில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது. யு23 அணியின் பயிற்சியாளர் நௌசத் மூசா சிறப்பாக வழிநடத்துகிறார்.

இந்திய சீனியர் அணி நியூசிலாந்துடன் நட்புரீதியான ஆட்டத்தில் மோதுவதால் இந்தத் தொடரில் சீனியர் வீரர்களுடன் யு23 வீரர்களும் கலந்து விளையாடி வருகிறார்கள். நடப்பு சாம்பியனான இந்தியா மீண்டும் கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குரூப் ஏ பிரிவில் வங்கதேசமும் இலங்கையும் மோதுகின்றன. இந்திய அணி அரையிறுதியில் வங்கதேசம், பூடான் அல்லது இலங்கையை நவ.14ஆம் தேதி சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் 79ஆவது நிமிஷத்தில் அலி ஹம்தான் மற்றும் 84ஆவது நிமிஷத்தில் முஸ்தான் ஹசன் அடித்த ஃபிரி கிக் பந்தை துபே சிறப்பாக தடுத்தார்.

இந்திய அணி: பிரியான்ஷ் துபே (கோல்கீப்பர்), சிங்லென்சனா சிங் கோன்ஷாம் (கேப்டன்), அபிஷேக் சூர்யவன்ஷி, அப்துல் ரபீஹ் (மங்லென்தாங் கிப்ஜென் 46’), முகமது உவைஸ், சுஹைல் அஹ்மத் பட் (விஷ்ணு பிவி 65’), கைமிந்தாங் லுங்டிம், ரிக்கி ஷாபோங், சான்டான் 6, மகார்டன் 6, மண்டி, பிரிசன் பெர்னாண்டஸ் (எபிந்தாஸ் யேசுதாசன் 78’)

summary

SAFF Championships: India enter semifinals with 1-0 win over Maldives

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.