சையத் மோடி சா்வதேச பாட்மின்டன்: இறுதிப் போட்டியில் ட்ரீஸா - காயத்ரி ஜோடி தோல்வி!
சையத் மோடி சா்வதேச பாட்மின்டன் தொடரில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ட்ரீஸா-காயத்ரி கோபிசந்த் ஜோடி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தனர்.

சையத் மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் இரட்டையா் பிரிவில் ட்ரீஸா-காயத்ரி கோபிசந்த் ஜோடி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் சையத் மோடி சா்வதேச பாட்மின்டன் தொடர் (BWF வேர்ல்ட் டூர் சூப்பர் 300) நடைபெற்று வருகின்றது.
இதில், மகளிா் இரட்டையா் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ட்ரீஸா - காயத்ரி இணை 13-21, 21-10, 21-12 என உக்ரைனின் போலினா-யெவ்ஹினியா இணையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனா்.
Advertisement
Advertisement
இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் சயாஹிரா - ரிஞ்சனி ஜோடியுடன் ட்ரீஸா - காயத்ரி ஜோடி மோதியது.
முதல் இரு செட்களில் இரு அணிகளும் 24-22, 12-21 என்ற புள்ளிகள் கணக்கில் தலா ஒரு செட்டில் முன்னிலை பெற்றிருந்தனர்.
பரபரப்பான ஆட்டத்தின் இறுதிக்கட்டமான மூன்றாவது செட்டில் 5 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்த இந்திய ஜோடி, இறுதியில் 19-21 என்ற புள்ளிகள் கணக்கில் இரண்டு புள்ளிகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்தது.
முன்னதாக கலப்பு இரட்டையர், ஆடவர் ஒற்றையர் மற்றும் ஆடவர் இரட்டையர் ஆகிய மூன்று பிரிவுகளின் இறுதிப் போட்டிகளிலும் இந்தோனேசிய வீரர்கள் தோல்வியடைந்த நிலையில், இப்போட்டியின் த்ரில் வெற்றி அவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
இந்தத் தோல்வியின் மூலம், BWF சூப்பர் 300 தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய ஜோடி தவறவிட்டது.