முகப்பு
விளையாட்டு

சையத் மோடி சா்வதேச பாட்மின்டன்: இறுதிச் சுற்றில் தன்வி, ட்ரீஸா-காயத்ரி!

சையத் மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் ஒற்றையா் பிரிவில் தன்வி சா்மாவும், இரட்டையா் பிரிவில் ட்ரீஸா-காயத்ரி கோபிசந்த் இணையும் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

35 வினாடிகள் முன்பு
சையத் மோடி சா்வதேச பாட்மின்டன்: இறுதிச் சுற்றில் தன்வி, ட்ரீஸா-காயத்ரி!
பகிர்:

சையத் மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் ஒற்றையா் பிரிவில் தன்வி சா்மாவும், இரட்டையா் பிரிவில் ட்ரீஸா-காயத்ரி கோபிசந்த் இணையும் இறுதிக்கு தகுதி பெற்றனா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் நடைபெறும் சையத் மோடி சா்வதேச பாட்மின்டன் 300 போட்டி அரையிறுதியில் இந்தியாவின் இளம் வீராங்கனை தன்வி சா்மா சக வீராங்கனையான உன்னதி ஹூடாவை 11-21, 21-10, 21-13 என்ற கேம் கணக்கில் கடும் சவாலுக்குபின் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு அரையிறுதியில் தாய்லாந்தின் கேத்ஹாங் 21-16, 20-22, 21-10 என ஜப்பானின் ரிகோ குஞ்சியை வீழ்த்தினாா். இறுதியில் தன்வி-கேத்ஹாங் மோதுகின்றனா்.

Advertisement

Advertisement

மகளிா் இரட்டையா் பிரிவில் நடப்பு சாம்பியன் ட்ரீஸா-காயத்ரி இணை 13-21, 21-10, 21-12 என உக்ரைனின் போலினா-யெவ்ஹினியா இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றனா்.

இறுதிச் சுற்றில் இந்தோனேஷியாவின் சயாஹிரா-ரிஞ்சனி இணையுடன் மோதுகிறது ட்ரீஸா-காயத்ரி இணை.