இந்தியாவுக்கு 62ஆவது பதக்கம்..! ஸ்கிஃப் பாய்மரப் படகுப் போட்டியில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!
ஆசிய விளையாடு ஆடவருக்கான பாய்மரப் படகுப் போட்டியில் வெள்ளி வென்ற இந்திய அணி குறித்து...
ஆசிய விளையாடுப் போட்டியில் ஆடவருக்கான ஸ்கிஃப் 49இஆர் பாய்மரப் படகுப் போட்டியில் பிரிவில் இந்திய ஆடவர் அணி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஸ்கிஃப் படகோட்டுதலில் 49இஆர் பிரிவில் பங்கேற்ற இந்தியர்கள் மனு பிரான்சிஸ் மற்றும் பிரின்ஸ் நோபிள் 3 ரேஸில் வென்று 23 சராசரி புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்துடன் வெள்ளி வென்றார்கள்.
Advertisement
Advertisement
சீன வீரர்கள் 16 சராசரி புள்ளிகளுடன் நான்கு ரேஸில் வென்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்கள். ஹாங்காங் அணி இந்தியாவை விட 1 புள்ளிகள் பின்தங்கி 24 சராசரி புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்தது.
படகோட்டுதலில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ஒரு புள்ளியும் இரண்டாமிடம் பிடிப்பவர்களுக்கு இரண்டு புள்ளியும் என அதற்கேற்ப இடங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். இதில் குறைவான புள்ளிகள் பெறும் அணியே வெல்லும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த வெற்றியுடன் இந்திய அணிக்கு 62ஆவது பதக்கம் கிடைத்துள்ளது. அதில் 10 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். தரவரிசையில் இந்தியா ஏழாவது இடத்தில் நீடிக்கிறது.
Asian Games 2026 sailing: Manu Francis, Prince Noble win silver in men’s skiff
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.