ஒரே நாளில் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்... பதக்கப் பட்டியலில் 5ஆவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!
ஆசிய விளையாட்டில் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா குறித்து...
ஆசிய விளையாட்டில் இந்திய அணி ஒரே நாளில் ஐந்து தங்கம் வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
நேற்றுவரை (அக்.1) இந்திய அணி 10 தங்கம், 23 வெள்ளி, 33 வெண்கலம் வென்று 66 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்தது.
Advertisement
Advertisement
இன்று (அக்.2) ஒரே நாளில் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 75 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணியினர் குத்துச் சண்டையில் 3 தங்கமும், மல்யுத்தம், வில்வித்தை என தலா ஒவ்வொரு தங்கமும் பெற்று அசத்தியுனர்.
வில்வித்தையில் இரண்டு வெள்ளிப் பதக்கமும் கிக் பந்து விளையாட்டு, படகுப் போட்டியில் தலா ஒரு வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 பதக்கப் பட்டியல்
1. சீனா - 311 பதக்கம் (161 தங்கம்)
2. ஜப்பான் - 237 பதக்கம் (69 தங்கம்)
3. தென் கொரியா - 134 பதக்கம் (33 தங்கம்)
4. உஸ்பெகிஸ்தான் - 63 பதக்கம் (19 தங்கம்)
5. இந்தியா - 75 பதக்கம் (15 தங்கம்)
5 gold, 2 silver, and 2 bronze medals in a single day... India climbs to 5th place on the medal tally!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.