FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கேரள அரசின் விருது விழாவில் முதல்வர் விஜய் பாணியில் ஆன்சி சோஜன்..! வைரல் விடியோ!

முதல்வர் விஜய் பாணியில் மீண்டும் சைகை செய்த கேரள வீராங்கனை ஆன்சி சோஜனின் வைரல் விடியோ குறித்து...

14 அக்டோபர் 2026, 3:32 pm IST
முதல்வர் விஜய் பாணியில் ஆன்சி சோஜன் - படங்கள்: இன்ஸ்டா / ஷெர்பு, ஆன்சி சோஜன், பிடிஐ.
பகிர்:

கேரள தடகள வீராங்கனை ஆன்சி சோஜன் மாநில அரசின் விருது விழா மேடையில் தமிழக முதல்வர் விஜய் பாணியில் சைகை செய்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் பங்கேற்று, 6.53 மீட்டருக்கு தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கேரளத்தைச் சேர்ந்த 25 வயதான ஆன்சி சோஜன் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார். ஆசிய விளையாட்டில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்

Advertisement

Advertisement

தீவிர விஜய் ரசிகையான இவர் ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற பிறகு முதல்வர் விஜய்யிடம் இருந்து அழைப்பு வந்தால் நன்றாக இருக்குமெனக் கூறினார்.

முன்னதாக தில்லியில், இந்திய நேஷ்னல் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆன்சி சோஜன் வென்ற போது முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் செய்த சைகையை செய்து கவனம் பெற்றார்.

இந்த நிலையில், நேற்று கேரள முதல்வர் ஜிவி ராஜா ஸ்போர்ட்ஸ் விருதுகளை அளித்தார். இதில் பங்கேற்க வந்திருந்த ஆன்சி சோஜன் மேடைக்கு வரும்போது விஜய்யின் மெர்சல் பட பாணியிலும் சட்டப் பேரவையில் செய்த சைகையையும் செய்து அசத்தினார். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

summary

GV Raja Sports Award function ancy sojan Tamilnadu Cm Vijay actions goes viral on social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments