ரபீனியா, லமின் யமால் தலா 2 கோல்கள்: பார்சிலோனா மீண்டும் அபார வெற்றி!
லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணியின் மற்றுமொரு அபார வெற்றி குறித்து...
ஸ்பெயின் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி ராயோ வாலெகானோ அணியை 5-2 என வீழ்த்தி மற்றுமொரு அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இந்த வெற்றியுடன் பார்சிலோனா அணி மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ரியல் மாட்ரிட் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.
பார்சிலோனா அணி தனது சொந்த மண்ணில்ராயோ வாலெகானோ அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் அணியின் கேப்டன் ரபீனியா 19, 71 ஆகிய நிமிஷங்களில் கோல் அடித்தார்.
Advertisement
Advertisement
நட்சத்திர வீரர் லமின் யமால் 21, 90ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். இந்த சீசனில் முதல்முறையாக இவர் கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் பார்சிலோனா அணி 70 சதவிகித நேரம் பந்தை தனது கட்டுக்குள் வைத்திருந்து, 634 பாஸ்களை 92 சதவிகித துல்லியத்துடன் செய்து அசத்தினார்கள்.
லா லிகா புள்ளிப் பட்டியல்
1. பார்சிலோனா - 9 புள்ளிகள்
2. ரியல் மாட்ரிட் - 9 புள்ளிகள்
3. அத்லெடிகோ மாட்ரிட் - 7 புள்ளிகள்
4. அலவெஸ் - 7 புள்ளிகள்
5. ஒசாசுனா - 7 புள்ளிகள்
6. செவில்லா - 6 புள்ளிகள்
FC Barcelona beat Rayo Vallecano 5-2 in La liga,won 3 out of the 3 matches
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.