சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்ற ஆர்ஜென்டீன வீரர் நீகோ பஸ்!
ஆர்ஜென்டீன வீரர் நீகோ பஸ் சீரி ஏ லீக்கில் சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்றுள்ளது குறித்து...
ஆர்ஜென்டீன வீரர் நீகோ பஸ் (21 வயது) சீரி ஏ லீக்கில் 2025/26 சீசனின் சிறந்த இளம் வீரருக்கான விருதை வென்றுள்ளார். இவர் ஆர்ஜென்டீனாவின் அடுத்த மெஸ்ஸி என அழைக்கப்படுகிறார்.
இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ லீக்கில் நீகோ பஸ் கோமா 1907 என்ற அணியில் விளையாடி வருகிறார். மிட்ஃபீல்டராக இருக்கும் இவர் மெஸ்ஸியின் இயல்பில் விளையாடுவருகிறார்.
சீரி ஏ லீக்கில் நீகோ பஸ் 12 கோல்கள், 7 அசிஸ்ட்டுகளை செய்து அசத்தியுள்ளார். மேலும், கடந்த சீசனின் சிறந்த சீரி ஏ அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ லிக்கிற்கான இளம் சிறந்த வீரர் என்ற விருது முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழா மிலனில் லா ஸ்காலா என்ற இடத்தில் நடைபெற்றது.
கோமா 1907 அணியின் தலைமைப் பயிற்சியாளர் செஸ்க் ஃபேப்ரிகாஸ் 2025/26 சீசனின் சிறந்த பயிற்சியாளருக்கான விருதை வென்றுள்ளார்.
கடந்த சீசனில், முதலிடம் பிடித்த இன்டர் மிலன் சீரி ஏ கோப்பையை வென்றது. நான்காம் இடம்பிடித்த கோமா 1907 சாம்பியன்ஸ் லீக்கிற்கு முதல்முறையாகத் தேர்வாகி சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனைக்கு நீகோ பஸ் மிகவும் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணிக்கு சாம்பியன்ஸ் லீக்கை வென்று தருவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Nico Paz wins Serie A Best Young Player of the Season Award
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.