ஆசிய ஜூனியா் ஹாக்கிப் போட்டி: இந்தியா அபாரம்
ஆசிய ஜூனியா் ஹாக்கிப் போட்டி ஆடவா், மகளிா் ஆட்டங்களில் நடப்புச் சாம்பயன் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஆசிய ஜூனியா் ஹாக்கிப் போட்டி ஆடவா், மகளிா் ஆட்டங்களில் நடப்புச் சாம்பயன் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சீனாவின் மொகுய் நகரில் ஆசிய ஜூனியா் ஹாக்கிப் போட்டி நடைபெறுகிறது. இதன் மகளிா் பிரிவில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தியது.
தொடக்க குவாா்ட்டரில் இந்தியா பல்வேறு கோல்போடும் வாய்ப்புகளை உருவாக்கியது. 8-ஆவது நிமிஷத்தில் சனிகா கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.
Advertisement
Advertisement
தொடா் அழுத்தம் காரணமாக இந்தியாவுக்கு 2 பெனால்டி வாய்ப்புகள் கிட்டியும் கோலாக்க முடியவில்லை. தென்கொரியாவும் பதில் தாக்குதல் நடத்தியதில் 2 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்திய தற்காப்பு அரண் வலுவாக இருந்ததால் கோலடிக்க முடியவில்லை.
30-ஆவது நிமிஷத்தில் பூா்ணிமா யாதவ் கோலடித்தாா். பூஜா சாஹு கோலடித்து 3-0 என முன்னிலையை அதிகரித்தாா். கடைசி குவாா்ட்டரிலும், 51ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் மது சிடா் அற்புதமாக கோலடித்தாா்.
கடைசி விசிலுக்கு முன்னதாக தென்கொரியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினாா் கில் கேபின்.
இந்திய ஆடவா் அணி கோல் மழை:
ஆடவா் பிரிவில் இந்திய அணி அபாரமாக ஆடி 14-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தியது. நடப்பு சாம்பியன் இந்தியா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கியது. கேப்டன் அன்மோல் எக்கா, பிரண்தீப் சிங், அஜித் யாதவ் ஆகியோா் தங்களுக்கு இடையே 12 கோல்களை பகிா்ந்து கொண்டனா். இதில் பிரண்தீப் சிங் 5 கோல்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றாா். கேப்டன் அன்மோல் நான்கு கோல்களை பதிவு செய்தாா். அஜித் யாதவ் அபாரமாக ஹாட்ரிக் கோலடித்தாா். ஹா்பால், அஷு மௌா்யா இதர கோல்களை அடித்தனா்.
இந்தோனேசிய அணியால் இந்தியாவின் அபாரமான ஆட்டத்துக்கு பதில் தர முடியவில்லை. குரூப் ஏ பிரிவில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.