ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 10,000 மீ. ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.
ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 செப். 19 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
இதில், இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
5வது நாளான இன்று, பெண்களுக்கான பிரிவில் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் வீராங்கனை சீமா குமாரி கலந்துகொண்டார்.
பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியில், சிறப்பான தொடக்கத்தை சீமா அளித்திருந்தார். முதல் 1000 மீட்டரை வெறும் 3:18.12 விநாடிகளில் கடந்தார். 2,000 மீட்டரை 6:36.13 விநாடிகளில் கடந்தார்.
நான்காவது சுற்றில் சற்று பின்தங்கியிருந்தாலும், அடுத்தடுத்து முந்திக்கொண்டு சக போட்டியாளர்களுக்கு சவாலாக மாறினார்.
நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை 32:50.05 விநாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். முதலிடத்தை பஹ்ரைனைச் சேர்ந்த வின்ஃபிரெட் யாவி பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்ரார். ஜப்பானின் நொசோமி டனகா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் சீமா குமாரி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் இந்தியாவுக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் கிடைத்துள்ளது. இந்த பெருமையை நாட்டிற்கு பெற்றுக்கொடுத்துள்ளார் ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த சீமா குமாரி.
Asian Games India's Seema Kumari wins bronze in women’s 10,000m
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.