இந்தியா - கனடா போட்டி மழையால் தாமதம்!
இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் தாமதமாகியுள்ளது.
இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையினால் தாமதமாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் தனது கடைசி லீக் போட்டியில் இந்திய அணி கனடாவை எதிர்த்து விளையாடுகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி ஃபுளோரிடாவில் நடைபெறுகிறது. ஃபுளோரிடாவில் மழை பெய்து வருவதால் இந்தப் போட்டிக்கு டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மழை நின்றவுடன் விரைவில் போட்டி ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.