FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கே.என்.நேரு விடுதலையில் சிக்கல்

கடலூர், அக். 8: முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, (படம்) கடலூர் மத்திய சிறையில் இருந்து சனிக்கிழமை ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுகளை காண்பித்தும் அவர்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:18 am IST
பகிர்:

கடலூர், அக். 8: முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு, (படம்) கடலூர் மத்திய சிறையில் இருந்து சனிக்கிழமை ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுகளை காண்பித்தும் அவர் இரவு 7 மணி வரை விடுதலை செய்யப்படவில்லை.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது நிலப் பறிப்பு உள்ளிட்ட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்குகளில் மூன்றில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலையை சேதப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரைக் கைது செய்வதற்கான வாரன்டை நீதிமன்றம் பிறப்பிக்க வில்லை.

இந்த வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட கே.என்.நேருவுக்கு, நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பிக்கவில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 24 மணி நேரத்தில் கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து, ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அளித்த உத்தரவு நகல்களை காண்பித்து,கே.என். நேருவை கடலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி, சிறை கண்காணிப்பாளருக்கு நேருவின் வழக்குரைஞர் பாஸ்கரன் சனிக்கிழமை மனு அளித்தார். காலை 10 மணிக்கு இந்த மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்றுக் கொண்ட சிறைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், சிறைச்சாலை உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, நேருவை விடுதலை செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கே.என். நேரு விடுதலை செய்யப்படுவார் என்பதால் தி.மு.க.வினர், சனிக்கிழமை மாலை 7 மணி வரை சிறை வாயிலில் காத்திருந்தனர். கடலூர் மற்றும் திருச்சி போலீஸாரும் அங்கு காத்திருந்தனர். எனவே, விடுதலையாகி வரும் நேரு மீண்டும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments