FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆம் ஆத்மி தனித்துப் போட்டி

ஆம் ஆத்மி கட்சி எப்போதும் தனித்தே போட்டியிடும் என்றார் அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஜோசப் ராஜா.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

ஆம் ஆத்மி கட்சி எப்போதும் தனித்தே போட்டியிடும் என்றார் அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஜோசப் ராஜா.
 தஞ்சாவூர் கீழஅலங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று ஆம் ஆத்மி கட்சிதான். எந்தக் காரணத்துக்காகவும் கூட்டணி வைக்க மாட்டோம்.
 இப்போது, கட்சியின் கட்டமைப்பைப் பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு வருகின்றனர். இந்தத் தேர்தலில் போட்டியிட முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அவ்வாறு போட்டியிட்டால், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றார் அவர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments