FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மே. 16-ல் தமிழக தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கு கால அவகாசம்

மே 16 ஆம் தேதி நடைபெறும் தமிழக தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ள நல்ல கால அவகாசமாக கருதப்படுகிறது.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கடந்த 2011 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வரவிருக்கும் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ள நல்ல கால அவகாசமாக கருதப்படுகிறது.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 19 ஆம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தில்லியில் இன்று அறிவித்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கையோ மே 13 ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே சுமார் ஒரு மாத காலம் இடைவெளி இருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில் தற்போது மே 16 ஆம் தேதி தான் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து வாக்குப் பதிவு நடைபெறும் நாள் வரை சுமார் 70 நாள்கள் வரை கால அவகாசம் இருக்கிறது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி இறுதி வடிவம் பெறாத நிலையில், இந்த நீண்ட கால அவகாசம் அரசியல் கட்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments