FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வைகோ, அன்புமணி ராமதாஸ் இரங்கல்

மக்களவையின் முன்னாள் தலைவர் பி.ஏ.சங்மா மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவர் 1991-இல் மத்திய நிலக்கரித் துறை இணை

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

வைகோ (மதிமுக): மக்களவையின் முன்னாள் தலைவர் பி.ஏ.சங்மா மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவர் 1991-இல் மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சராகவும், தொழிலாளர் துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியபோது, மாநிலங்களவையில் நான் பங்கேற்ற பல விவாதங்களில் அவர் குறுக்கிட்டுப் பேசியதை நினைத்துப் பார்க்கிறேன். கடந்த 1994-இல் மாநிலங்களவையில் இந்திய இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் பாதித்திருப்பதை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து நான் பேசியதை அமைச்சராக இருந்த பி.ஏ.சங்மா பாராட்டினார். அதேபோல, சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் அனைத்திலும் முத்திரை பதித்தவருமான நண்பர் பி.ஏ.சங்மா மறைவுக்கு மதிமுக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
 அன்புமணி ராமதாஸ் (பாமக): முதிர்ச்சி நிறைந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் பி.ஏ.சங்மா. மேகாலயா மாநில முதல்வராகவும் சிறப்பாகப் பணியாற்றியவர். அத்துடன் 8 முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு மக்களவைத் தலைவர் எப்படி நடுநிலையாகச் செயல்பட வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். அதைத் தொடர்ந்து வந்த மக்களவைத் தலைவர்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்கியவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments