லாரிகளில் வந்த விலையில்லா பொருள்கள் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, தேவாரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு மினி லாரிகளில் கொண்டு வரப்பட்ட
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, தேவாரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு மினி லாரிகளில் கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பொருள்கள் பிடிபட்டன.
தேவாரம் அருகே உத்தமபாளையத்தில் இருந்து போடி நோக்கி வந்த 2 மினி லாரிகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா படம் பொறித்த பொருள்களை ஏற்றிச் செல்வதாக தேவாரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸார் லாரிகளை சோதனையிட்டதில், பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பைகள், செருப்புகள் இருப்பது தெரியவந்தது. அவை போடி ஜ.கா.நி. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டியவை எனக் கூறப்படுகிறது.
இதைகுறித்து போலீஸார், கம்பம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜையாவுக்கு தகவல் அளித்ததன்பேரில், அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.