முகப்பு
தமிழ்நாடு

என்னையும் என் குடும்பத்தையும் விட்டு விடுங்கள்: மோடியை கிண்டலடித்த தமிழ் நகைச்சுவை நடிகர்! 

என்னையும் என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் என்று பிரதமர் மோடியை ட்விட்டரில் தமிழ் நகைச்சுவை நடிகர் ஒருவர் கிண்டலடித்துள்ள சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 19 ஏப்ரல் 2018, 4:58 pm IST
பகிர்:

சென்னை: என்னையும் என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் என்று பிரதமர் மோடியை ட்விட்டரில் தமிழ் நகைச்சுவை நடிகர் ஒருவர் கிண்டலடித்துள்ள சம்பவம் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமையன்று லண்டனில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய அவர் தனது பேச்சில் இந்தியாவில் வாழும் 125 கோடி மக்களும் எனது குடும்பமே என்று பேசினார்.

அவரது இந்தப் பேச்சானது பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும்  வெளியிடப்பட்டது. இந்த ட்வீட்டுக்கு தமிழ் நகைச்சுவை நடிகர் கருணாகரன் பதில் அளித்திருந்தார். அதில் அவர், 'தயவு செய்து என்னையும், என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள், மன்னிக்கவும். பை'  என்று நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

அவரது இந்த பதிலுக்கு ட்விட்டரில் பரவலான வரவேற்பு எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments