ஸ்டெர்லைட்: 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க தூத்துக்குடி காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 173 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க தூத்துக்குடி காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 242 வழக்குகளில் முதல் வழக்கை தவிர பிற வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்த போராட்டம் தொடர்பான ஒரு சம்பவத்துக்கு 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தவறு. முதல் வழக்குடன், மற்ற குற்றச்சாட்டுகளை வாக்குமூலமாக சேர்த்து ஒரே வழக்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடக் கோரி மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
மனுவை விசாரித்த நீதிபதி, ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கு எண் 191 உடன் , மற்ற வழக்குகளை, 161ன் கீழ் ஒப்புதல் வாக்குமூலங்களாக சேர்த்து, ஒரே வழக்காக விசாரிக்க தூத்துக்குடி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
கடந்த மே மாதம் 22ம் தேதி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக மே 22ம் தேதி மற்றும் அடுத்தடுத்து நாட்களில் மொத்தமாக 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 22ம் தேதி தொடரப்பட்ட 173 வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்கக் கோரி வழக்குரைஞர் ஜான் வின்சென்ட் தொடர்ந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது கிராம மக்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.