FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் அணியில் இணைய கமல் சிக்னல்': சு.திருநாவுக்கரசர்

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அணியில் இணைய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிக்னல்' கொடுத்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் 

Updated On : 7 ஆகஸ்ட் 2018, 1:31 am IST
பகிர்:


நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அணியில் இணைய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சிக்னல்' கொடுத்திருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மறுமதிப்பீடு முறைகேடு வருத்தம் அளிக்கிறது. இது கல்வித் துறைக்கே ஏற்பட்ட அவமானமாகும். பதவியில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
சிலை கடத்தல் வழக்கை நேர்மையான அதிகாரியான ஐ.ஜி.பொன். மாணிக்கவேலு சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். ஆனால், அரசியல் ரீதியாக யாரையோ காப்பாற்றுவதற்காக சிபிஐக்கு வழக்கை மாற்றுவது கண்டிக்கத்தக்கது.
ஆகஸ்ட் 10-இல் ஆர்ப்பாட்டம்: அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீடு முறைகேட்டைக் கண்டித்து ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி வடசென்னை திரு.வி.க.நகரில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற பாமக, விசிக, அமமுக விருப்பம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. 
நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். 
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அண்மையில் பேசிய பேச்சு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலமிக்க தலைவராக அவர் உருவெடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில்...நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெறும். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. அது மேலும் விரிவடையும். காங்கிரஸ் கூட்டணியில் இணைய கமல்ஹாசன் சிக்னல்' கொடுத்துள்ளார்.
அதிமுக பக்கம் ரஜினிகாந்த் செல்வதால் அவருக்கு லாபம் இல்லை. பிரிந்த அதிமுக அணிகள் இணைவதற்கு வாய்ப்பு இல்லை. பாஜகவின் பக்கம் ரஜினிகாந்த் சென்றால் சிறுபான்மையினர், தலித் வாக்குகளை அவர் இழக்க வேண்டியிருக்கும் என்றார்.
கமல்ஹாசன் மறுப்பு
காங்கிரஸ் அணியில் இணைவதற்கு சிக்னல்' எதுவும் கொடுக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: காங்கிரஸ் அணியில் இணைவதற்கு நான் சிக்னல் கொடுத்துவிட்டதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். என் கட்சிக்கு நான்தான் சிக்னல் கொடுக்க முடியும். என் கட்சிக்கு யாரோ கொடுத்தால் அது சிக்னல்' அல்ல.
உள்ளாட்சித் தேர்தலைத் தமிழக அரசு நடத்த வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான அட்டவணையை உடனே வெளியிட வேண்டும். இதற்காக எல்லோருமே குரல் கொடுத்து வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி நீதிமன்றத்தை எங்கள் கட்சி சார்பிலும் நாடுவோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments