அங்கீகாரம் இல்லாத 5,000 தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டு தற்காலிக அங்கீகாரம்
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 5, 000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத 5, 000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தற்காலிக அங்கீகாரத்தை 31.05.2019-ஆம் ஆண்டு வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அங்கீகாரம் வாங்க வேண்டும். அந்த அங்கீகாரத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ளவேண்டும். தொடக்க கல்வித்துறைக்கு கீழே இருக்க கூடிய ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளாக இருந்தால் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அங்கீகாரம் பெறவேண்டும். உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளிகளாக இருந்தால் தனியார் பள்ளி இயக்குநரிடம் அங்கீகாரம் வாங்க வேண்டும்.
ஆனால், தமிழகம் முழுவதும் அங்கீகாரம் வாங்காத 5,000 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மெட்ரிகுலேஷன் இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 2,000 பள்ளிகள், தொடக்க கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 2,000 பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,000 பள்ளிகள் என 5, 000 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கீழ் எந்த ஒரு பள்ளியும் அங்கீகாரம் செயல்படக் கூடாது. அங்கீகாரம் இல்லாமல் இயங்குவது சட்டத்துக்கு எதிரானது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 5,000 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கப்படுகிறது என பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.