FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி ஆகஸ்ட் 12-இல் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.கே.தஹில்ரமணி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) பதவியேற்கிறார்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.கே.தஹில்ரமணி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.12) பதவியேற்கிறார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் அன்றைய தினம் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, அவர் அண்மையில் பொறுப்பேற்றார். அவருக்குப் பதிலாக மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) வகித்து வந்த வி.கே.தஹில்ரமணியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் மத்திய சட்ட அமைச்சகம் நியமனம் செய்து அறிவிக்கை வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments