FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை: 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் முறையீடு

தேர்தல் ஆணையம் அதிமுகவை முடக்கி பிறப்பித்திருந்த உத்தரவு நிலுவையில் இருந்த போது அந்த உத்தரவை மீறி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய பேரவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:


தேர்தல் ஆணையம் அதிமுகவை முடக்கி பிறப்பித்திருந்த உத்தரவு நிலுவையில் இருந்த போது அந்த உத்தரவை மீறி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய பேரவைத்தலைவருக்கு அதிகாரம் இல்லை என 18 எம்.எல்.ஏக்கள் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் வாதம் நிறைவடைந்த நிலையில், பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம், தமிழக முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹ்தகி ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து 18 எம்.எல்.ஏக்கள் தரப்பில் பதில் வாதம் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
நோக்கம் என்ன?: இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர், மோகன் பராசரனின் வாதம்: இந்திய தேர்தல் ஆணையருக்கு சட்டப்பேரவைத் தலைவரை விட அதிகமான அதிகாரம் உள்ளது. இந்த நிலையில், அதிமுவை முடக்கி இந்தியத் தேர்தல் ஆணையம் பிறப்பித்திருந்த உத்தரவு நிலுவையில் இருந்தபோது, அந்த உத்தரவையும் மீறி எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை.
ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் இல்லை: தேர்தல் ஆணையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது அதில் நீதிமன்றம் கூட தலையிட முடியாது. முதல்வரை மாற்றக் கோரி தான் எம்.எல்.ஏக்கள் 18 பேரும் கோரிக்கை விடுத்தனரே தவிர, ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணமோ, உள்நோக்கமோ அவர்களுக்கு இல்லை என வாதிட்டார். இதனையடுத்து விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments