FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கல்லூரி மாணவர்கள் கையில் மீண்டும் பட்டாக்கத்திகள்: சாலையில் உரசிச் செல்லும் விடியோ

சென்னை மாநகர பேருந்தில் பயணித்த சில கல்லூரி மாணவர்கள், தங்கள் கையில் பட்டாக் கத்தியுடன் பயணம் செய்த விடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:


சென்னை: சென்னை மாநகர பேருந்தில் பயணித்த சில கல்லூரி மாணவர்கள், தங்கள் கையில் பட்டாக் கத்தியுடன் பயணம் செய்த விடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

புத்தகங்களைத் தூக்க வேண்டிய கையில், பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர்களைப் பார்த்து பேருந்தில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். 

Advertisement

Advertisement

பேருந்தின் படிகட்டில் நின்று கொண்டிருந்த மாணவர்கள், கையில் கத்தியைப் பிடித்துக் கொண்டு சுழற்றியும், சாலையில் உரசி தீப்பிடிக்க வைத்தும் பொதுமக்களுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.

பேருந்தின் இரண்டு வாயில்களிலும் கல்லூரி மாணவர்கள் கையில் கத்தியை வைத்துக் கொண்டு சாகசங்கள் செய்ததால், எந்த வழியில் இறங்குவது என்று தெரியாமல் பயணிகள் கதிகலங்கி நின்றனர்.

ஏற்கனவே சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் பட்டாக் கத்திகளை உரசிய விடியோ வைரலாகி, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனால் கத்திக் கலாச்சாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தலைதூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments