FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சசிகுமார் கொலை வழக்கு: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மீண்டும் விசாரணை

முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். 

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். 

கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார் (37). இவர் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி கவுண்டர் மில்ஸ் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கரும்புக்கடையைச் சேர்ந்த சையது அபுதாஹீர்( 30),  சாய்பாபா காலனியைச் சேர்ந்த சதாம் (27), உக்கடத்தைச் சேர்ந்த சுபேர் (30), சாய்பாபா காலனியைச் சேர்ந்த முபாரக் (38) ஆகிய நான்கு பேரையும் சிபிசிஐடி போலஸார் கைது செய்திருந்தனர்.

இதனிடையே, வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு கடந்த ஜனவரியில் மாற்றம் செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை ரேஸ்கோர்ஸில் கிளை அலுவலகம் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரின் விடுகளிலும் சோதனை நடத்தி சில ஆவணங்களையும் பறிமுதல் செய்திருந்தனர். 

Advertisement

Advertisement

இவ்வழக்கில் முதற்கட்ட விசாணை கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்காக கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்த 30 பேர் அடங்கிய அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments