FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழக வீரர்கள் சாதனை: ஸ்டாலின் வாழ்த்து

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த  தமிழக வீரர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

சென்னை:  இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த  தமிழக வீரர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:  இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் 18-ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் தொடர்ந்து பதக்கங்களை வென்று வரும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் திமுக சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதில், தமிழகத்தைச் சார்ந்த வீரர்களும் வெற்றி வாகை சூடி வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
  குறிப்பாக, 4 ஷ் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்  போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப் பதக்கமும்,  400 மீட்டர் ஆடவருக்கான தடை தாண்டும் ஓட்டப்போட்டியில் தருண் அய்யாசாமி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சவுரவ் கோஷல் வெண்கலப் பதக்கமும்,  டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கலப் பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்திருக்கிறார்கள். 
 ஸ்குவாஷ் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருக்கும் தீபிகா கார்த்திக்,
ஜோஷ்னா சின்னப்பா ஆகியோருக்கும் திமுக சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து சர்வதேச அளவிலான போட்டிகளில் மென்மேலும் பல பதக்கங்ளை வாங்கிக் குவித்து தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments