FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை:  தம்பிதுரை

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

கரூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை.
கரூர் சணப்பிரட்டியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: 
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் கல்லூரி, பார்மசி, ஆயுர்வேத கல்லூரியும் கொண்டுவர உள்ளோம். சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு மறுக்கவில்லை. இந்த வழக்கில் ஆவணங்கள் வேண்டும் என மத்திய அரசு கேட்டுள்ளது. அதை அனுப்பியுள்ளார்கள். கருணாநிதி மகன் என்பதற்காகத்தான் ஸ்டாலின் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுகவில் வாரிசு அரசியல் தான் உள்ளது.  மக்களுக்கு நேரடியாகச் செல்லும் திட்டங்களை ஜெயலலிதா கொடுத்துள்ளார். மக்கள் அதிமுகவின் பக்கம் இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினால் அதிமுக ஆட்சியை வீழ்த்த முடியாது. அந்தக் கட்சி எப்படி செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். வரும் நாடாளுமன்றத்தேர்தலில் அனைத்து தொகுதியிலும் தனித்துபோட்டியிடுவோம். 
பணமதிப்பு இழப்பினால் நாட்டில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. சிறு, குறு வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள் என்பது தான் உண்மை 
என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments