FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மூத்தவர் இருக்க இளையவருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றுள்ளது: திமுகவை விமர்சித்த தம்பிதுரை

மூத்தவர் இருக்க இளையவருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்று திமுகவை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார். 

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

மூத்தவர் இருக்க இளையவருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்று திமுகவை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
திறமையின் அடிப்படையில் இல்லாமல், கருணாநிதியின் மகன் என்ற முறையில் ஸ்டாலினுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மூத்தவர் இருக்க இளையவருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 

கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்துக்கு அமித்ஷா வராததால் பாஜகவை வீழ்த்துவோம் என்கிறார் ஸ்டாலின். அதிமுகவை வீழ்த்துவோம் என ஸ்டாலின் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது. மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை அதிமுக தீர்மானிக்கும். 

Advertisement

Advertisement

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. வியாபாரிகள், விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்திற்கு பயன் என்றால் ஆதரவு அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments