FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நியாய விலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ரேஷன் பொருள்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


ரேஷன் பொருள்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை அபிராமபுரத்தில் உள்ள நியாய விலைக் கடையில் கடந்த 2010-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரேஷன் பொருள்கள் விதிகளுக்கு முரணாக விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். மேலும், அந்த நியாய விலைக் கடையில் பணியாற்றிய கீதா என்ற பணியாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கீதா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குடும்ப அட்டைகள் மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டிருந்தாலும், ரேஷன் பொருள்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க முடியவில்லை என வேதனை தெரிவித்தார். மேலும் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவது தொடர்பாக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments