விரைவில் அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள், தொலைக்காட்சி உதயம்!
அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விரைவில் உதயமாக உள்ளதாக அதிமுகவினை வழி நடத்தும் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை: அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விரைவில் உதயமாக உள்ளதாக அதிமுகவினை வழி நடத்தும் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக எம்.எள்.ஏக்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவினை வழி நடத்தும் குழு ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
Advertisement
Advertisement
அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விரைவில் உதயமாக உள்ளது. அதற்கான அடிப்படைப் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆகிய இரண்டும் தற்பொழுது டிடிவி தினகரன் வசம் உள்ளதால் அதிமுகவுக்கென தனியாக ஒரு செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி துவங்க வேண்டிய கட்டாயத்துக்கு முதல்வர் தரப்பு தள்ளப்பட்டு உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.