சேலம் -சென்னை பசுமை வழிச் சாலை திட்டம்: மறு பரிசீலனை செய்ய இ.கம்யூ வலியுறுத்தல்
சேலம் -சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் -சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சேலம் -சென்னை பசுமை வழிச் சாலை, எட்டுவழிச் சாலை ஆகியத் திட்டங்கள் ரூ. 10,000 கோடி செலவில் மாநில அரசின் ஒப்புதலுடன் மத்திய அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், வன நிலங்களும் கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஓரிரு ஏக்கர் நிலங்களை மட்டுமே கொண்டுள்ள சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தத் திட்டத்தை எதிர்த்து சேலம், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட்டு தற்போதுள்ள சேலம் -சென்னை சாலையை அகலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.