FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உயிரிழந்த 13 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

Updated On : 7 ஜூன் 2018, 12:40 pm IST
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 12 பேரும், மறுநாள் நிகழ்ந்த வன்முறையின்போது ஒருவரும் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

இதில், 7 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,  எய்ம்ஸ் அல்லது ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், மீதமுள்ள 6 பேரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதன் தொடர்ச்சியாக, தமிழரசன், சண்முகம், கந்தையா, ஸ்னோலின், செல்வசேகர், கார்த்திக், காளியப்பன்  ஆகிய 7 பேரின் உடல்கள்  மறு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, அவர்களது குடும்பத்தினரிடம்  ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, புதுவை ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் வினோத் செளத்ரி தலைமையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில்,  6 பேரின் உடல்கள் புதன்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில், மணிராஜ், கிளாஸ்டன், ரஞ்சித்குமார், ஜான்சி, ஜெயராமன் ஆகிய 5 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் அந்தோணி செல்வராஜின் உடலை இன்று பெற்றுக்கொள்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அதன்படி அந்தோணி செல்வராஜின் உடல் 13ஆவது உடலாக உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments