நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி கைது
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி கடல் தீபனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி கடல் தீபனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் கடந்த ஏப்.10-ஆம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தமிழர்வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் உள்ளிட்டோர் மீது தெர்மல் காவல் ஆய்வாளர் (பொ) ராமதாஸ் வழக்குப் பதிவு செய்தார்.
ஏற்கெனவே தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கடல் தீபன் கைதுசெய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 5 -ஆம் தேதி இவர் மீதான தடுப்புக் காவல் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், காவிரி விவகாரத்தில் கடலூரில் கர்நாடகப் பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் கடன் தீபனுக்கு பிணை கிடைத்த நிலையில், நெய்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியது தொடர்பாக அவரை தெர்மல் போலீஸார் வியாழக்கிழமை அவரை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.